ரிஷாத்துக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!
வில்பத்துக்கு அருகில் காடுகள் வெட்டப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று(02.08.2023) புதன்கிழமை உயர் நீதிமன்றத்தினால் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் ரிஷாத் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு அனுமதியளித்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேன்முறையீட்டு விசாரணை

அதன்படி, இந்த மனுவை அடுத்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam