திரவப்பாலின் விலை அதிகரிப்பு?
திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால் உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சந்தையில் உள்ளூர் பால் மா பொதி ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு லீற்றர் பால் விலை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரவ பால் மீதான வரியை நீக்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
குறித்த வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சர் இணங்கியுள்ளதாக கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,திரவப்பாலின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.



