அரிசி விலை அதிகரிப்பு: அங்காடிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு
அரிசி விலை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சாதாரண சந்தையில் ஒரு கிலோ கிராம் அரிசியின் குறைந்த பட்ச விலை 200 ரூபாயில் இருந்து 240 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை சதோச அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு அங்காடிகளில் ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பா 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் ஒருவருக்கு 3 கிலோ கிராம் அரிசி மாத்திரமே விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை சதோச ஊடாக மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படும் எனக் கூறினாலும் அங்கும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படடுள்ளது.
சதோச அங்காடிகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள் விற்பனைக்கு தேவையான அளவில் இல்லை என தெரியவருகிறது. நாட்டின் பல சதோச அங்காடிகளில் அரிசி, காய்ந்த மிளகாய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் உள்நாட்டு நாட்டு அரிசி 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு, அரிசியை இறக்குமதி செய்தேனும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து, குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
