ரிஷாத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு இன்று வழங்கப்பட்டுள்ள உத்தரவு
தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் கொழும்பு நீதிவான் ரசிந்த்ரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமி ஹிஷாலினியை பணிக்காக அழைத்து வந்த தரகர் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் இன்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக ரிசாத் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரிசாத்தின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சிறுமி தீப்பரவலுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஐந்தாவது பிரதிவாதியாக ரிசாத் பதியூதீன் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
