அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் உச்சம்:பதவி விலக தயாராகும் நிதியமைச்சர்
2022 ஆம் ஆண்டுக்காக இரண்டாவது முறையாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அலி சப்றி நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாகவும் அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி என்பதை யோசனை முன்வைத்துள்ள அணியினர் தெளிவுப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்படியான நிலைமையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்படக் கூடும் என எதிர்க்கும் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை குறைப்பதற்கு பதிலாக புதிய வரவு செலவுத் திட்டம் மூலம் எதிர்ப்பு மேலும் அதிகரித்து வெடித்து சிதறக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் நீடிக்கும் என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியில் இருக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அலி சப்றி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
