அநுர தலைமையிலான அரசுக்கு பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பாராட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நாடு சரியான பொருளாதாரத் திசையில் சென்று கொண்டிருக்கின்றது என இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்காக பிரிட்டன் வணிகத் தலைவர்கள் குழு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்றும் அவர் கூறினார்.
நிதி அமைச்சில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுக்கும் பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால முன்னெடுப்புக்கள்
இந்தச் சந்திப்பில் பிரிட்டன் உயர்ஸ்தானிகர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாடினார்.
அரசு ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் மேற்கொண்ட விரைவான முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார்.
இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும், எதிர்கால முன்னெடுப்புக்கள் குறித்தும் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெளிவுபடுத்தினார்.
இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதியை, குறிப்பாக சேதன விவசாயப் பொருட்கள், ஆடைகள், இயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பிரிட்டன் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச இறையாண்மை கடன் பத்திரங்களை மறுசீரமைப்பதில் இலங்கையின் முயற்சிகளையும், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை திறம்பட செயற்படுத்துவதையும் உயர்ஸ்தானிகர் வெகுவாகப் பாராட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
