வாரத்திற்கு 2000 கிலோகிராம் ஏற்றுமதி..! விவசாயிகளுக்கு றீச்சா பண்ணையின் புதிய வாய்ப்பு
தங்களுடைய வருமானத்தையும், விளைச்சலையும் இரட்டிப்பாக்கும் வகையில் கிளிநொச்சி றீச்சா பண்ணையினால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விவசாயம் செய்து, விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் அல்லது விவசாயத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் றீச்சா பண்ணையைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்
2000 கிலோகிராம் முருங்கை காய் ஏற்றுமதி
குறிப்பாக, பிரான்சில் உள்ள தமிழ்க் கடை ஒன்றுக்கு வாரத்திற்கு சுமார் 2,000 கிலோகிராம் முருங்கைக்காய் தேவைப்படுகின்றது.

ஆர்வமுள்ளவர்கள், கிளிநொச்சியில் உள்ள றீச்சா பண்ணையைத் தொடர்புகொண்டு முருங்கைக்காய் ஏற்றுமதி தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்றுமதி செய்யப்படும் முருங்கைக்காய்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதேவேளை, முருங்கைக்காயின் நீளத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
எனவே, முருங்கைக்காய் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் றீச்சா பண்ணையைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri