100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் - பந்துல குணவர்தன
உடனடியாக அரசியை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய ஒரு லட்சம் மெற்றி தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யும் இந்த அரிசி தொகை கிடைத்த பின்னர், 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் நுகர்வோருக்கு ஒரு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது என்றால், சந்தைக்கு அரிசி விநியோகிக்கப்படுவது குறைக்கப்படுமாயின் அரசாங்கம் அதில் தலையிட நேரிடும்.
அரிசியை இறக்குமதி செய்து, நியாயமான விலைக்கு மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. இதனால், அதனை சரியாக செய்து. ஒரு லட்சம் மெற்றி தொன் அரியை இறக்குமதி செய்யவுள்ளோம்.
அரிசி மாஷஃபியா, ஆலை உரிமையாள்கள் நுகர்வோரை சுரண்டி சாப்பிட இடமளித்து விட்டு வேடிக்கை பார்க்க தயாரில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
