இந்தியாவில் இருந்து பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய திட்டம்!
இலங்கைக்கு 3லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சேதனப் பசளைகளை நம்பி மேற்கொள்ளப்பட்ட விவசாயம் மற்றும் இரசாயன பசளைகள்கள் நிறுத்தப்பட்டமையால், ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சி காரணமாகவே அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 2லட்சம் மெற்றிக்தொன் நாடு இன அரிசியும் ஒரு லட்சம் தொன் ஜீஆர் 11 என்ற சம்பாவுக்கு பதிலான அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
ஏற்கனவே ஒரு லட்சம் தொன் அரிசிக்கே அமைச்சரவை அனுமதியை வழங்கியிருந்தது.
இந்த அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த இறக்குமதியை மேற்கொள்வதற்கு சத்தோச மற்றும் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது
ஏற்கனவே சுமார் 30ஆயிரம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
