நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு:சமல் ராஜபக்ச வெளியிட்ட தகவல்
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளி, பயறு, வத்தாளை கிழங்கு என்பனவற்றை உட்கொண்டனர்.
மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கும் நல்லது. நானும் ஓர் விவசாயி, சேதன பசளையை பயன்படுத்தி விவசாயம் செய்தேன். இது ஓர் புது அனுபவம் இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
விளைச்சல் குறைந்தால் அதற்கான நட்ட ஈட்டை வழங்குவதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
யாரும் சேதன பசளையிட்டு விவசாயம் செய்ய விரும்பாமல் இல்லை.
கௌபி, பயறு, கிழங்கு வகைகளை நாம் உணவாக உட்கொள்ள வேண்டும்.
அரிசிக்கு தற்பொழுதும் தட்டுப்பாடு காணப்படுகின்றது என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
