நாய்-பூனை கூட சாப்பிடாத உணவு தமிழர் பாடசாலைகளுக்கு! சீன அரசின் செயலால் வெடித்தது சர்ச்சை(Video)
நாய் மற்றும் பூனைகள் கூட மணந்துவிட்டு சாப்பிடாமல் செல்லும் உணவை சிறுவர்களுக்கு எந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளீர்கள் என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன அரசாங்கத்தால் தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு பொதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், நாட்டில் அதிகாரிகள் இருக்கின்றீர்களா இல்லையா என யோசிக்க தோணுகின்றது.
சீன அதிகாரிகள் உங்கள் அனுமதி இல்லாமலே பாடசாலைகளுக்கு உணவு பொதிகளை வழங்கியுள்ளார்களா? ஒரு உணவு பொதி வழங்குவதென்றால் அது பாவனைக்கு உகந்ததா என அதன் தரத்தை சோதித்து மக்களுக்கு வழங்க வேண்டும்.
சீன அரசாங்கம் வழங்கிய அரிசியை சமைத்த பின்னர் அது றபர் களி போல இழுபடுகின்றது. அதை உட்கொண்ட மாணவர்களுக்கு வயிற்று பிரச்சினைகள் வருகின்றது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்தை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,



