“அரிசி விலை அதிகரிக்கப்படலாம்”
அரசி விலை கட்டுப்பாடு தொடர்பான வர்த்தமானி நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரிசி விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இலங்கையில் ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலையானது 150 ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க அமைச்சரவை தீர்மானித்தது. அரிசி விலை கட்டுப்பாட்டுக்காக அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் இராணுவ நிர்வாகத்திற்கு என்ன நடந்தது.
இராணுவத்தினரால் வர்த்தக சந்தையை கட்டுப்படுத்த முடியாது என்று நான் எத்தனை முறை கூறினேன். தற்போது கால தாமதமாகி விட்டது.
டிசம்பர் மாதத்தில் நாடு அரிசியின் விலை 150 ரூபாவாக அதிகரிக்கும். இதற்கு ஒரே தீர்வு எனது சக்தி வேலைத்திட்டம் மாத்திரமே எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
