வவுனியாவில் பதுக்கப்பட்ட அரிசி மூட்டைகள் : இதுவரை முற்றுப்பெறாத விசாரணை (Photos)
வவுனியாவில் இந்திய அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது ஒரு வருடத்தை கடந்தும் முடிவுறாத நிலையில் உள்ளது.
குறித்த விசாரணை தொடர்பான நிலைமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தெரியவந்துள்ளதுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணையே முடிவடையாத நிலையில் காணப்படுகின்றது.
விசாரணை அறிக்கைகள்
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விபரத்தினை வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வினவப்பட்ட போது மாவட்ட செயலகத்தால் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், விசாரணைகள் தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட செயலகத்தால் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றால் குறித்த விடயத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்திருந்தது.
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1276 கிலோகிராம் நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக பரிசோதனைகள்
ஆகவே விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் தலைமையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, குறித்த அரிசியினை மேலதிக பரிசோதனைகளுக்காக பிரதேச செயகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
