உப்பு அறுவடை செய்து வரும் நெல் விவசாயிகள்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் பல ஏக்கர் நெற்செய்கை நிலப்பரப்பு மண்டைக்கல்லாறு உவர்நீர் தடுப்பணை இல்லாமையால் கடல் நீர் உட்புகுவதன் மூலம் வயல் நிலங்கள் உவர்த்தன்மை அடைந்து வருகின்றன.
உவர்த்தன்மை காரணமாக வயல் நிலங்களை விவசாயிகள் கைவிட்ட நிலையில் வயல் நிலங்களில் தற்போது உப்பு விளைந்து காணப்படுகின்றது.
கடுமையான பாதிப்பு
இந்நிலையில், குறித்த பகுதிகளில் தடுப்பணை அமைத்து தருமாறு உரிய அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்ட பல விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், இதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நெல் அறுவடை செய்த பகுதிகளில் உப்பு அறுவடையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
