புதுக்குடியிருப்பு கிழக்கில் சிறுபோக நெற்செய்கையாளர்களின் கூட்டம்
புதுக்குடியிருப்பு கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் தலைவர் அன்புமணி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், புதுக்குடியிருப்பு கமநல சேவைத்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜீவராகவன், முள்ளியவளை கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சிறுபோக நெற்செய்கை
இதன்போது, முத்தையன் கட்டுகுளத்தின் கழிவு நீரினை மறித்து, தடுப்பு அணைகளை பயன்படுத்தி 1057 ஏக்கர் வயலில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 01.04.2024 தொடக்கம் 15.04.2024 வரையான மூன்றரை மாத நெல்லினை சிறுபோக செய்கைக்காக பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாரிய அழிவு
கடந்த காலபோகத்தில் விவசாயிகளுக்கு வெள்ளத்தினால் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, அவர்களின் நட்ட ஈட்டு கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் அந்த நட்டஈடு கிடைத்தால்தான் தொடர்ந்தும் விவசாயம் செய்யமுடியும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/2682b494-871a-41f9-9744-14dfb4bd4480/24-65ea9f39c1a71.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4a26259e-84eb-44a6-91b7-2bb8dcbab5a0/24-65ea9f3a67733.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3d516b2b-a57b-4de5-9582-37ebcbe1e831/24-65ea9f3ae9503.webp)