கிளிநொச்சியில் இடம்பெற்ற நெற்செய்கை திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி - கல்மடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு 2011 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய குளமான கல்மடுக் குளத்தின் கீழான சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்வது தொடர்பான கூட்டம் நேற்று (06.03.2024) மாவட்ட மேலதிக அரசு அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சிறுபோக நெற்செய்கை
இதன்போது இவ்வாண்டு 2011 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர் செய்கையும்வ மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் இரணைமடு நீர் பாசன பொறியியலாளர் மற்றும் பிரதிநீர் பாசன பொறியியலாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகள் 700 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குளத்தில் 26 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளத்தில் முழுமையாக நீர் தேங்கியுள்ள நிலையில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/b6cb687c-4bfb-4ce5-adcd-5b8b29810681/24-65e8b5061962f.webp)