அரிசி விலையை குறைக்க முடியாது! அரசாங்கத்தின் கோரிக்கை நிராகரிப்பு
ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலையில் விநியோகிக்கும் பட்சத்திலேயே, குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியுமென, ஸ்ரீலங்கா தலைநகரில் அரிசி மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் ஒரு இலட்சம் ரூபா தண்டம் அறவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ள நிலையில், வர்த்தகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான அரிசித் தொகை கைவசம் உள்ளதாகவும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் ஸ்ரீலங்கா விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி ஊடாக 98 ரூபாவிற்கு சம்பா மற்றும் கெக்குளு அரிசியை விற்பனை செய்யுமாறும் நாட்டரிசியை 96 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி விலையைக் குறைக்காத பட்சத்தில் தங்களாலும் விலையைக் குறைக்க முடியாது என, மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை இலங்கையில் விவசாயிகளுக்காக நாட்டரிசி கிலோ 50 ரூபாயாகவும், சம்பா அரிசி 52 ரூபாயாகவும், உலர்த்தப்படாத நெல் 44 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று வேளை சோறு சாப்பிட்டவர்கள் இரு வேளை சோறு சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அனைத்து நெல் சந்தைப்படுத்தல் சபைகளிலும் விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, அரிசிக்கான சகாய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், அரிசி விற்பனையில் ஈடுபட்டுள்ள வீழ்ச்சி தம்மையும் பாதித்துள்ளதாக, கொழும்பு - புறக்கோட்டையில் மூட்டைத் தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறிருப்பினும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலையைக் குறைக்காத பட்சத்தில், அரிசியை அரசாங்கம் நிர்ணயித்த விலையில் பெற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம் என்பதே யதார்த்தம்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
