கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகளவில் குறையும் வாய்ப்பு
கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறையும்..
இதன்படி, உணவங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்தால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை 20% குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலையும் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.