ராஜபக்சக்களின் குடியுரிமையைப் பறிக்கக் கோரி கொழும்பில் கையெழுத்து போராட்டம் (Photos)
இலங்கையை வங்குரோத்தாக்கிய ராஜபக்சக்களின் குடியுரிமையை இரத்துச் செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து கையெழுத்துத் திரட்டும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாகப் இன்று (23.11.2023) பொதுமக்களின் கையெழுத்து திரட்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் பிரகாரம் 'நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் கையெழுத்துத் திரட்டும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
220 இலட்சம் பேருக்கும் இழப்பீடு
நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய நபர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும் நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதுடன் மதத் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களைப் பதிவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
