சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையா? இல்லையா? தீர்மானம் இன்னும் சில நாட்களில்!
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேனகா விஜேசுந்தர மற்றும் நீதியரசர் நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.
இதேவேளை, சட்டமா அதிபர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதற்கு அரச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் -ரொஹந்த அபேசூரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
கடந்த ஜனவரி 28 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்க மறுத்ததையடுத்து இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்டது.
இந்தநிலையில், ஹிஸ்புல்லா சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 15 இன்படி ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க தடைகள் இல்லை.
இந்தநிலையில், தனது கட்சிக்காரர் சுமார் இரண்டு வருடங்களாக நியாயமற்ற முறையில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், வழக்கின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு கோரி பிரதிவாதியால் செய்யப்பட்ட மனு, கடந்த ஜனவரி 28ஆம் திகதியன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிணை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன பிணை வழங்க மறுத்தார்.
2019 ஏப்ரல் 2020 இல் கைதுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ் மீது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் ஒரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
