இந்தியாவுடனான உடன்படிக்கையை மீள் பரிசீலனை செய்யக் கோரும் இலங்கை அரசியல்வாதி
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா விடுத்த மிரட்டல், இந்தியாவுடனான எரிசக்தித் துறை இணைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான மதிப்புமிக்க பாடங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் தாக்கி 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இராஜதந்திர உறவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அச்சுறுத்தியுள்ளது.
எனவே இதனை பாடமாகக் கொண்டு, இரண்டு மின்சாரக் கட்டமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கும், பல்துறை பெட்ரோலிய குழாய் பதிப்பதற்கும் இந்தியாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது கையெழுத்திட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நகல்களை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார்.

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
