அதானியின் திட்டங்களை மீள ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு
இலங்கையில், இந்திய அதானி குழுமத்தின் எரிசக்தி திட்டங்கள் குறித்த ஆய்வை மறுஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்புடைய திட்டம் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
திட்டங்களுக்காக மதிப்பிடப்பட்ட செலவுகள் உள்ளிட்ட காரணிகளை குழு மதிப்பாய்வு செய்யும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் இந்த திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
மின் திட்டங்கள்
மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்கள் மொத்தம் 484 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இயற்கை சமநிலை கெடும் என்ற வாதத்தை முன்வைத்து, மன்னாரில் உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri