மட்டக்களப்பு மறைமாவட்ட முன்னாள் பொதுப்பணிப்பாளர் காலமானார்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பொதுப்பணிப்பாளர் அருட்தந்தை அருளானந்தன் தேவதாசன் காலமானார்.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் விகார் ஜெனரல் ஆகப் பணியாற்றிய மொன்சிஞ்ஞோர் அருளானந்தன் தேவதாசன், இன்று(27.08.2026) அமைதியாக இறைவனடி சேர்ந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரங்கல் தெரிவிக்கும் மக்கள்
நீண்டகாலமாக குருத்துவப் பணியாற்றிய அவர், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நிர்வாகம், ஆன்மிக வழிகாட்டல் மற்றும் சமூகப் பணிகளில் முக்கிய பங்காற்றியவராக நினைவுகூரப்படுகிறார்.

மக்களுடன் அன்பாகப் பழகிய ஆன்மிக மேய்ப்பராகவும், கருணைமிக்க தலைவராகவும், நெருக்கடியான காலங்களில் அமைதியாக வழிகாட்டிய ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார்.
அவரது தன்னலமற்ற இறைபணி, ஆழமான விசுவாசம், எளிமையான அணுகுமுறை மற்றும் சமூகத்திற்குச் செய்த சேவைகள் மட்டக்களப்பு மறைமாவட்ட மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் முற்றாக ஸ்தம்பித்துள்ளது இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening