100 மில்லியன் ரூபாவைத் தாண்டியது அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்
கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்தும் வசதி தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய திட்டம்
அந்த வகையில் இந்த வசதியானது எதிர்வரும் மே முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்திருந்தார்.
அத்துடன் இதன் முன்னோடித் திட்டம் கடந்த 10ஆம் திகதி தொடங்கியிருந்தது. அதன்படி, கொட்டாவ மற்றும் கடவத்தை பரிமாற்றங்களில் வங்கி அட்டைகள் மூலம் சாரதிகள் அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
