உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்! ரிசாட் பதியுதீன்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நிலாவெளி பகுதியில் நேற்று (17) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் அநியாயமாக கைதான வர்களை விடுவிக்கப்பட்டு சரியான விமோசனம் கிடைக்க வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம்.
குச்சவெளி பிரதேசத்தில் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாக்களித்தால் மக்கள் காங்கிரஸின் ஊடாக அதிகளவான ஆதரவை பெற்றுக் கொள்ளும் என நம்புகிறோம்.
தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை ஊடாக பிரதேச சபை ஆட்சியை அமைக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri