நாடு திரும்பும் பசில்: தீவிரமடையும் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள்
வெளிநாட்டில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச, கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகள்
இந்நிலையில், பசில் ராஜபக்சவின் வருகையுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் வேகமெடுக்கும் என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam