கைக்குண்டு மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது
கைக்குண்டு,வாள் உட்பட கூரிய ஆயுதங்களை வான் ஒன்றில் எடுத்துச் சென்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உட்பட 5 பேரை நேற்று கைது செய்ததாக மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்துகமை பொலிஸ் நிலைய பொலிஸார், பாலிகா வீதி பகுதியில் உடனடி சோதனை சாவடி ஒன்றை ஏற்படுத்தி நாரவவில பகுதியில் இருந்து அத்துலத்முதலி பாடசாலை பக்கம் நோக்கி சென்ற வான் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு
அப்போது வானில் இரண்டு வெட்டுக்கத்திகள், வாள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, கறுப்பு நிற கையுறை, மிளகாய் தூள், உப்புத்தூள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் வானையும் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது கைது செய்யப்பட்டவர்கள், களுத்துறை, மத்துகமை, தெமட்டகொடை, ரஜவத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மத்துகமை பிரதேசத்தில் செயற்பட்டு வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இருந்து வருவதாகவும் அது சம்பந்தமாக குற்றம் ஒன்றில் ஈடுபடும் நோக்கில் இந்த சந்தேக நபர்கள் சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
