மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தினால் மக்கள் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளியை பேணுதல், கைகளை கழுவிக் கொள்ளல் மற்றும் கை சுத்திகரிப்பான் பயன்படுத்தல் போன்ற பழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இந்த நாட்களில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் காரணத்தினால் அந்த துறையுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுவோர் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியமானது என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam