உள்நாட்டு விமான சேவை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கையில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இந்தக் கலந்துரையாடலில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் விமான நிலைய போது வசதிகளை மேம்படுத்தவும், பிற சர்வதேச விமான நிறுவனங்களை நமது விமான நிலையத்திற்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2028 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் விமானப் பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தயாராவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
