இந்தியா - இலங்கை படகு சேவை மீண்டும் காலவரையின்றி ஒத்திவைப்பு
நாகப்பட்டினத்திற்கும் - காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே மே 13 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படிவிருந்த பயணிகள் படகுச் சேவை "தொழில்நுட்பக் குறைபாடு" காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் "தொழில்நுட்பக் குறைபாட்டின்" தன்மை அமைச்சரால் வெளிப்படுத்தப்படவில்லை.
கடல்சார் ஒத்துழைப்பு
இந்நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, சீறற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்குப் முன்னர் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், இந்தியா - இலங்கை கடல்சார் ஒத்துழைப்பின் முக்கிய அங்கமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது மூன்று முறை தாமதமானது.
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்தியா 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 104 கிலோமீட்டர் (56 கடல் மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |