இலங்கையின் செயல்திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
இலங்கையின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட செயல்திறன் வலுவாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.
வோசிங்டனில்(Washington - US) நேற்று(17.05.2024) செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலி கோசாக்( Julie Kozack) சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் மதிப்பாய்வை முடிக்க இரண்டு முக்கியமான கூறுகள் தேவை என்று கூறியுள்ளார்.
இதில் முதலாவதாக, ஒப்புக்கொள்ளப்பட்ட முன் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு
இரண்டாவதாக, நிதியளிப்பு உத்தரவாத மதிப்பாய்வை நிறைவு செய்யவேண்டும். இந்த மதிப்பாய்வு பலதரப்பு பங்காளிகளின் பங்களிப்புகளை உறுதிப்படுத்தும் மற்றும் கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பேரண்ட பொருளாதாரக் கொள்கைகள் சாதகமான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன என்று கோசாக் குறிப்பிட்டார்.
பணவீக்கத்தில் விரைவான சரிவு, வலுவான இருப்பு குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகளாகும். இவை அனைத்தும் இலங்கையின் பாராட்டத்தக்க விளைவுகளில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான அடுத்த படிகளை கோசாக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தற்போது முதன்மையான கவனம் வெளி தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தைகளை முடிப்பது மற்றும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கொள்கை ரீதியான உடன்பாட்டை எட்டுவதற்கான நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ஜூலி கோசாக் மேலும், தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |