நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானம்

Ranil Wickremesinghe Sri Lanka Narendra Modi India
By Theepan May 02, 2024 03:42 PM GMT
Report

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்று(02.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - நாளை முதல் புதிய விலை

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - நாளை முதல் புதிய விலை

கப்பல் போக்குவரத்து சேவை

அவர் மேலும் தெரிவிக்கையில், 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி (Narendra Modi) கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானம் | Resume Nagapattinam Kangesanthurai Ferry Service

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் கப்பல்சேவை ஆரம்பித்து தொடரவுள்ளது.

அந்த வகையில் மீளவும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்துக்கும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesingh)தலைமையிலான அரசாங்கத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனம் தெரிவித்துக்கொள்கின்றது.

இலங்கையில் முதல் முறையாக ஐவருக்கு வழங்கப்பட்ட சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்த்து

இலங்கையில் முதல் முறையாக ஐவருக்கு வழங்கப்பட்ட சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்த்து

விசேட கட்டணம் அறவீடு

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக 'சிவகங்கை' எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானம் | Resume Nagapattinam Kangesanthurai Ferry Service

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது.

இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.

சாணக்கியனின் ஐந்து கோடியை தடுப்பதற்கு பிள்ளையானின் நகர்வு

சாணக்கியனின் ஐந்து கோடியை தடுப்பதற்கு பிள்ளையானின் நகர்வு

துறைமுகப் பயன்பாடு

மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானம் | Resume Nagapattinam Kangesanthurai Ferry Service

எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன. இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது.அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல் சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

முற்றாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு - தாமரைக்கோபுர வீதி

முற்றாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு - தாமரைக்கோபுர வீதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US