உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், சில நாட்களுக்கு தாமதப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் விடைத்தாள் மதிப்பீட்டை சில நாட்களுக்கு பிற்போட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நேற்று ஆரம்பமாகவிருந்த போதிலும், ஆசிரியர்களின் பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதால், சில ஆசிரியர்கள் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




