190 உயர்தரப் பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று பிற்பகல் வெளியாகியிருந்த நிலையில், 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
146 பாடசாலை பரீட்சாத்திகளுடையதும் 44 தனியார் பரீட்சாத்திகளுடையதுமான பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
இந்நிலையில், 2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை பரீட்சை மீளாய்வு செய் வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
