மீளக்கட்டமைக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி
வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி மற்றும் அதன் நிர்வாகக் கம்பனியை மீளக்கட்டமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பெறுகைச் செயன்முறையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றன முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்களவு பங்குகள் மற்றும் நிறுவன முகாமைத்துவத்தை ஒப்படைப்பதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி மற்றும் அதன் நிர்வாகக் கம்பனியை மீளக்கட்டமைத்தல் பொருத்தமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட யோசனை
இது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் யோசனையொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்த யோசனையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனியின் மீள்கட்டமைக்கப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கின்ற பணி நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள, அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்முயற்சியாண்மை மீள்கட்டமைப்பு அலகுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
