வாகன இறக்குமதி மீதான தடை நீக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றம்
2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச வருமானம்
நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.

இது 2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.
நேரடி வருமானம்
மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening