பயண தடை நீக்கப்பட்டாலும் அரச ஊழியர்களை பணிக்கும் அழைக்கும் நடவடிக்கையில் கட்டுப்பாடு
அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் இந்த நிலைமை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் காலங்களிலும் அத்தியாவசிய சேவை மாத்திரம் நடத்தி செல்லப்படும். சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு மேல் பயணத்தடை உள்ள போதிலும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதனால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை எதிர்காலத்தில் பணிக்கும் அழைக்குமாறும், கட்டாயம் சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சின் மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
