மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் குறித்து கிழக்கு ஆளுநரின் பணிப்புரை
மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை கடுமையான விதிமுறைகளுடன் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார்.
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(28.01.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
கடுமையான விதிமுறைகள்
இதன்போது, ஆளுநரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும் தலையிட்டு, அந்த தாமதங்களுக்குக் காரணமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்கினர்.

மேலும், மகாவலி ஆற்றின் குறுக்கே மணல் அகழ்வின் போது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரும் பிரதி அமைச்சரும் அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெரிவித்ததோடு, இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாதவாறு கடுமையான விதிமுறைகளுடன் உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam