புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விதித்துள்ள விதிமுறைகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு புதிய விதிகளை விதித்துள்ளார்.
அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து அமைச்சர்கள் எவரும் நாடாளுமன்ற அமர்வுகளை தவிர்க்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சகல அமைச்சர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (26) இடம்பெற்றபோது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியின் இந்த ஆலோசனை தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர்
எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் அனைத்து நாட்களிலும் சகல அமைச்சர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கினார்.
அதே போன்று அமைச்சர்களிடத்தில் சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபை முதல்வர் பதிலளிக்காமல், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தினுள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு குறித்த காலப்பகுதிக்குள் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்தந்த அமைச்சர்களால் பதிலளிக்கப்படும்.
அதற்கமை உயர் ஒழுக்கத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுந்தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார்.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
