இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணி முதல் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




