புதுவருட கொண்டாட்டங்களின் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?
கோவிட் புத்தாண்டு கொத்தணி ஏற்படுவதனை தடுப்பதற்காக சுகாதார வழிக்காட்டல்களை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், சுகாதார அமைச்சிடம் இது தொடர்பில் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலம் ஆரம்பிக்கவுள்ளது.
எனவே இம்முறை புத்தாண்டு நிகழ்வுகள் நடத்துவதற்கு இடமளிக்கப்படுமா என்பது தொடர்பிலும், அதில் மக்கள் கலந்துக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் சுகாதார வழிக்காட்டல் ஒன்றை உடனடியாக வெளியிடுமாறு சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பல்வேறு நபர்கள் மற்றும் குழுவினர் புத்தாண்டிற்காக பொது சுகாதார பரிசோதர்களிடம் பல்வேறு தகவல் பெறுவதற்கு முயற்சிப்பதனால் இது தொடர்பில் அவசியமான சுகாதார வழிக்காட்டல்களை வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri