சில கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி! எடுக்கப்பட்டது தீர்மானம்
வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளின் சில செயற்பாடுகள் பாதிப்பு
சில துறைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்கள் மீள நாடு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியசாலைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகிய தரப்பினருக்கு இடையே அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
