இலங்கையில் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம்
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக 80 வீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரதான நெருக்கடியாக மாறியுள்ளது.
இதனால் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களின் ஊழியர்கள் தங்கள் பணியை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறி மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 7 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri