மேல் மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள விசேட கண்காணிப்பு நடவடிக்கை
மேல் மாகாணத்தின் சுப்பர் மார்க்கட்டுகள் மற்றும் உணவகங்கள் என்பன கண்காணிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொலிஸார் இன்றைய தினம் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
தனிமைப்படுத்தல் சட்டங்களையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகளவில் குழுமும் சுப்பர் மார்க்கட்டுகள், உணவகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் கட்டாயம் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
