பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்
யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு நேற்றைய தினம் (26)பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால், 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, கையில் வெட்டுக்காயங்களுடன் உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் உணவினை கையாண்டமை, போன்ற குற்றச்சாட்டுகளிற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
குறித்த வழக்கில் கடை உரிமையாளரை குற்றவாளியாக கண்ட மன்று 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 12 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
