எரிவாயு வெடிப்புக்கு பொறுப்பான அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்! - சரத் பொன்சேகா
நாட்டில் எரிவாயு வெடிப்புக்குத் தீர்வு இல்லை என்றால் பொறுப்பான அதிகாரிகளைச் சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசு மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நம்மிடம் பணம் இல்லை. டொலர் இல்லை. கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளோம். அரசு கூறிய வகையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நமக்குப் பணம் இல்லை என்ற காரணத்தால் நாம் ஹெரோயின் உற்பத்தி செய்ய முடியாது.நமக்கு என்று கலாசாரம் காணப்படுகின்றது. எனவே, நாட்டை பள்ளத்தில் தள்ளாமல் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



