கனடா - யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் JMFOA அமைப்பினால் வைத்திய கருவி வழங்கிவைப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு Bi PAP என்னும் வைத்திய கருவியொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பான JMFOA - Canada சார்பாக இந்த கருவி டொக்டர் புவனேந்திரநந்தன் (Dr.K. Puvanenthiranathan), விஷேட வைத்திய நிபுணர் அ.நொயல்டன் (Dr.A.Noyalton) ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வினைடொக்டர் இ. ஸ்ரீநாத் ( Dr.E.Srinath) ஒருங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பினால் சுவாசகருவி வழங்கி வைப்பு