மனிதாபிமான ரீதியில் செயற்படும்போது சட்ட விதிமுறைகளுக்கும் மதிப்பளியுங்கள் - யாழ். மக்களிடம் வேண்டுகோள்

Covid-19 Police Jaffna People
By Kanamirtha Sep 10, 2021 10:21 AM GMT
Report

"நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழலில் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அதேவேளை, கோவிட் வைரஸ் தொற்றுப் பரவலையும் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்." என யாழ்ப்பாணம் மாவட்ட மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகக் குரல் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததையடுத்து அவரது மரணவீட்டுக்கு அதிகளவானோர் சென்றிருந்தனர். குறித்த நபரின் திடீர் மரணம் உளவியல் ரீதியிலான தாக்கத்தை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்தவராக அவர் அந்தப் பிரதேசத்தில் மதிக்கப்படுகின்றார். பிரதேச மக்களுடன் நல்லுறவைப் பேணி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவரது மரண வீட்டுக்கு அதிகளவானோர் சென்றுள்ளனர் என்பது பொலிஸ் தரப்பு கருத்தாக உள்ளது. குறித்த நபருக்கு நாமும் கௌரவமளிக்க வேண்டும்.

அதேபோன்று மற்றுமொரு சம்பவம் பதிவாகியிருந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்கச் சூழலைக் கருத்தில்கொண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது உண்மையில் மனிதாபிமான ரீதியான செயற்பாடு. ஏனெனில், சமூகசேவகர் என்ற ரீதியில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் உதவுவதற்காக முன்னின்று அவர் செயற்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நாம் கௌரவமளிக்க வேண்டும். இவ்விரு சந்தர்ப்பங்களுக்கும் முதலில் நாம் மதிப்பளிக்க வேண்டும்.

எனினும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம் உள்ளது. தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மிகவும் பயங்கரமான நோய்த்தொற்று மக்கள் மத்தியில் பரவி வருகின்றது. நோய்த்தொற்றுக் காவிகளாக மக்களே உள்ளனர்.

எனவே, இந்தத் தொற்றானது ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்குப் பரவக்கூடும். அதேபோன்று ஒருவருக்குத் தொற்றுப் பரவினால் அவரது குடும்பத்தினர், அயலவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்பை எதிர்கொள்வர்.

எனவே, சமூகத்தில் சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்த நபருக்கு நாம் கௌரவமளிக்கின்றோம். எனினும், அந்த நபரின் மரணவீட்டில் பங்கேற்பதால் தொற்றுப் பரவல் அதிகரிப்பதுடன் மற்றுமொருவரின் மரணத்துக்கும் அது காரணமாகின்றது.

எனவே, இவ்விடயமானது உயிரிழந்த நபரை அவமதிப்பதாக அமைந்துவிடும். அதேபோன்று நிதி பகிர்ந்தளிக்கும் விடயத்தை எடுத்துக்கொண்டால் நிதி பகிர்ந்தளிக்கும் நபர் மனிதாபிமான ரீதியில் நடந்துகொண்டாலும் அந்த இடத்தில் நோய்த் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வந்தவரினூடாகப் பணத்தைப் பெறுவதற்கு வராத ஒருவர் பாதிக்கப்படக்கூடும்.

இவ்வாறான மனிதாபிமானச் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை நடைமுறைப்படுத்த நேர்ந்தால் அது எமக்கும் வருத்தமளிக்கின்றது. எனினும், சட்ட ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது எமது பொறுப்பு.

எனவே, சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாம் மக்களைக் கோருகின்றோம். கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறே நாம் பொதுமக்களைக் கோருகின்றோம்" என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US