மருத்துவரை அச்சுறுத்திய ரிசாட்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சிறைச்சாலை திணைக்களத்திற்கு கடமை புரியும் வைத்தியர்கள் ,சிறைச்சாலையின் சுகாதார நிலையை மேற்பார்வை செய்வதற்காக தினமும் சிறைச்சாலைகளுக்கு வழக்கமாக செல்வார்கள். அந்த வகையில் கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேவை புரியும் வைத்தியர் ஒருவர் மகசின் சிறைசாலைக்கு சேவை நிமித்தம் சென்றுள்ளார்.
அந்த வேளையில் சிறைச்சாலையில் நோயாளர்களை பரிசோதனை செய்யும் வைத்திய அறையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிக்கொண்டு இருக்கும் போது திடீரென அந்த இடத்திற்க்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுதீன் குறிப்பிட்ட வைத்தியரை அச்சுறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியர் பொலிஸ்மா அதிபருக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும், சுகாதார பணிப்பாளருக்கும் முறைப்பாடு செய்த்துள்ளார் என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த தருணத்தில் சுகாதார நிலைமையினை கருத்திற் கொண்டு பாரளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுதீனை வெளியில் காத்திருக்குமாறு வைத்தியர் கூறியுள்ளார்.
ஒருவருக்கு பின் ஒருவரை அழைக்கும் விதமாக தான் அவ்வாறு அவர் கூறியுள்ளார்.அந்த நேரத்தில் பா.உ ரிசார்ட் பதியுதீன் அதிக கோபமடைந்து குறிப்பிட்ட வைத்தியரை மிரட்டி, மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.
இவ்வாறு மிரட்டி, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட்ட வைத்தியரால் சிறைச்சாலை ஆணையாளருக்கு எழுத்து மூலமாகவும், பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலமாகவும்,சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தாலும் இந்த விஷயம் தொடர்பாக விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரால் மரண அச்சுறுத்தல் விடக்கப்பட்டதா , அல்லது மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகளையடுத்து எமக்கு தெரிந்து கொள்ள முடியும்.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க பட்டு வருகின்றன என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
