பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நேற்று (01) கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு இன்று (02) அல்லது நாளை (03) தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
மாதாந்த உதவித்தொகை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து விலக மாட்டோம் என அமைச்சர் ராகவனிடம் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர 2017ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட மாதாந்த உதவித்தொகை அவ்வாறே எமக்கு வழங்கப்பட வேண்டும்.
அதன்படி அவர்கள் இந்த விடயத்தை முன்வைப்பதாக ஒப்புக்கொண்டனர் என்றும் அமைச்சரவைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும்” தம்மிக்க பிரியந்த குறிப்பிட்டள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
